ICU வார்டில் ஆப்ரேஷன் செய்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை - திடுக் சம்பவம்
அறுவை சிகிச்சை செய்த பெண், மருத்துவமனை ஊழியரால் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
அறுவை சிகிச்சை
கேரளா, கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த பெண் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து பரிசோதித்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய கூறியுள்ளனர். இதனால், 2 நாட்களுக்கு முன் அறுவை சிகிச்சை நடைபெற்றது.
அதன்பின், நோயாளியை ஐசியூ வார்டிற்கு மருத்துவமனை ஊழியரான சசீந்திரன் (55) என்பவர் கொண்டு சென்றுள்ளார். அப்போது அந்த பெண் அரை மயக்கத்தில் இருந்த நிலையில், ஊழியர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
பாலியல் வன்கொடுமை
ஆனால் அந்தப் பெண் தடுக்கமுடியாத சூழலில் இருந்துள்ளார். அதனையடுத்து அங்கு வந்த கணவரிடம் இதுகுறித்து கூறியுள்ளார். தொடர்ந்து புகாரளித்துள்ளனர்.
அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் ஊழியரை கைது செய்துள்ளனர். மருத்துவமனை நிர்வாகமும் அவரை இடை நீக்கம் செய்துள்ளது.