லீவு கொடுக்காத மேனேஜர் - அலுவலகத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த பெண்!
லீவு கிடைக்காமல் பெண் ஊழியர் அலுவலகத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மறுத்த மேனேஜர்
தாய்லாந்து, சமுத் பிராகன் மாகாணத்தில் எலக்ட்ரானிக் பொருட்கள் தொடர்புடைய பிளான்ட் ஒன்று இயங்கி வருகிறது. அங்கு வேலை செய்து வந்த மே என்ற 30 வயது பெண் ஊழியர் உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டுள்ளார்.
உடல்நிலை மிகவும் மோசமாகவே, மெடிக்கல் சர்டிபிகேட்டை பணிபுரியும் நிறுவனத்தில் சமர்பித்து செப்டம்பர் 5 முதல் 8 ஆம் தேதி வரை லீவ் எடுத்துவிட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
ஊழியர் மரணம்
தொடர்ந்து டிஸ்சார்ஜ் ஆன பிறகு செப்டம்பர் 12 லீவு வரை ஓய்வுக்காக மேலும் 2 நாட்கள் லீவு வேண்டும் என்று கேட்டுள்ளார். ஆனால் அதிக நாட்கள் லீவு எடுத்து விட்டதால் இனி லீவ் தர முடியாது என்று வேலை செய்யும்படியும் மேனேஜர் உத்தரவிட்டுள்ளார்.
எனவே, அந்த பெண் அலுவலகம் வந்து வேலை செய்துள்ளார். 20 நிமிடத்திற்குள் சுயநினைவை இழந்து மயங்கி விழுந்துள்ளார். தொடந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அடுத்த நாளே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.