4 வயது மகனை துடிதுடிக்க கொன்ற பிரபல நிறுவன பெண் சிஇஓ - அதிர்ச்சி பின்னணி!
தனியார் நிறுவன பெண் அதிகாரி 4 வயது மகனை கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
4 வயது குழந்தை கொலை
கொல்கத்தாவைச் சேர்ந்தவர் சுசனா சேத்(39). பெங்களூருவில் வசித்து வந்தார். கோவாவில் தனது 4 வயது மகனுடன் தங்கியிருந்துள்ளார்.
இந்நிலையில், தங்கியிருந்த அறையைக் காலி செய்யும்போது தனது மகன் உறவினர் வீட்டில் இருப்பதாகவும், பெங்களூரு செல்ல வாடகை கார் ஏற்பாடு செய்து தருமாறும் ஓட்டல் நிர்வாகத்தினரிடம் தெரிவித்துள்ளார். அதன்படி, ஏற்பாடும் செய்யப்பட்டது.
அதன்பின், அறையை சென்று பார்க்கையில் அங்கு ரத்தக் கறையைப் பார்த்த ஊழியர்கள் அதிர்ச்சியடைந்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, மடக்கி பிடித்து சுசனா சேத் வைத்திருந்த சூட்கேஸை சோதனை செய்ததில், அதில் 4 வயது மகனின் உடல் இருந்தது. உடனே உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பெண் அதிகாரி வெறிச்செயல்
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரிக்கையில் சுசனா சேத், பெர்க்மேன் க்ளீன் மையத்தில் இரண்டு ஆண்டுகள் பாஸ்டனில் உள்ள செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றலின் நெறிமுறைகள் மற்றும் நிர்வாகத்தை கையாளும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
வானியற்பியல் மற்றும் பிளாஸ்மா இயற்பியலில் சேத் நிபுணத்துவம் பெற்ற இயற்பியலில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். ராமன் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆராய்ச்சி கூட்டாளராகவும் பணியாற்றியுள்ளார். மேலும், கணவர் மீது அதிருப்தியில் இருந்துள்ளார். விவாகரத்து வழக்கு இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பதும் தெரியவந்தது.
தற்போது, அவர் கைது செய்யப்பட்டு கொலைக்காண காரணம் குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.