4 வயது மகனை துடிதுடிக்க கொன்ற தாய்- தானும் தூக்கிட்டு தற்கொலை! பகீர் சம்பவம்
இந்தியாவில் ஆன்லைனில் பாடம் படிக்காததால் 4 வயது மகனை கொன்றுவிட்டு, தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட தாயால் பரபரப்பு ஏற்பட்டது.
மகாராஷ்டிராவின் நாசிக் அருகே பாத்தார்டி பாட்டா பகுதியில் உள்ள சாய் சித்தி அடுக்குமாடி கட்டிடத்தில் வசித்து வருபவர் சாகர் பாட்டக், இவரது மனைவி சிக்கா(வயது 23), இவர்களுக்கு ரிதான்(வயது 4) என்ற மகன் இருக்கிறான்.
மழலையர் பள்ளியில் படித்து வரும் ரிதானுக்கு, ஆன்லைன் வகுப்புகள் நடந்து வருகிறது.
சம்பவ தினத்தன்று ஆன்லைன் பாடங்களை கவனிக்காமல் விளையாடிக் கொண்டு இருந்துள்ளான்.
இதனால் ஆத்திரமடைந்த, சிறுவனின் தாய் சிக்கா அங்கிருந்த தலையணையால் சிறுவன் ரிதானின் முகத்தில் வைத்து அழுத்தியுள்ளார்.
இதில் ரிதானின் மூக்கிலிருந்து ரத்தம் வடிந்ததுடன் துடிதுடித்து உயிரிழந்துள்ளான், இதைப்பார்த்த சிக்கா, தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆன்லைன் பாடத்தை கவனிக்காததற்காக பெற்ற மகனை கொலை செய்து தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.