ரூ.15 வரை கட்டணத்தை உயர்த்திய வங்கி - வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
ஹெச்.டி. எஃப்.சி வங்கியில் பரிவர்த்தனைக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
ஹெச்.டி. எஃப்.சி வங்கி
ஹெச்.டி. எஃப்.சி வங்கி, IMPS முறையில் பண பரிவர்த்தனை செய்வதற்கான கட்டணத்தை உயர்த்தியுள்ளது. அதன்படி, 1000 ரூபாய் வரையிலான பரிவர்த்தனைக்கான கட்டணம் 2 ரூபாய் 50 பைசாவாக உயர்த்தப்பட்டுள்ளது.
1000 ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் வரையிலான பரிவர்த்தனைக்கான கட்டணம் 5 ரூபாயாகவும், அதற்கு மேற்பட்ட பரிவர்த்தனைக்கான கட்டணம் 15 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
கட்டணம் உயர்வு
மேலும் NEFT முறையில் பணம் அனுபுவதற்கான கட்டணம், 24 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. இலவச மாதாந்திர பணப் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையைக் குறைத்துள்ளது.
முன்னதாக, சுய மற்றும் மூன்றாம் தரப்பு பரிவர்த்தனைகளுக்கான உச்ச வரம்பு ரூ.2 லட்சமாக இருந்தது, ஆனால் இப்போது அது ஒரு மாதத்திற்கு ரூ.1 லட்சமாகக் குறைக்கப்பட்டுள்ளது.