மீரா தங்கமே.. அம்மா இங்கதான் இருக்கேன் - பாத்திமா விஜய் ஆண்டனி உருக்கமான பதிவு!
மகளின் பிரிவின் துயரத்திலிருந்து இன்னும் மீள முடியவில்லை என பாத்திமா விஜய் ஆண்டனி பதிவிட்டுள்ளார்.
மகள் தற்கொலை
தமிழ் திரையுலகில் பிரபல இசையமைப்பாளராகவும், பாடகராகவும் இருப்பவர் விஜய் ஆண்டனி. இவர் 'சுக்ரன்' என்ற படத்தின் மூல தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானார்.
தொடர்ந்து காதலில் விழுந்தேன், டிஷ்யூம், வேட்டைக்காரன், அங்காடித் தெரு,உத்தம புத்திரன் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்து பிரபலமடைந்தார். அதுமட்டுமல்லாமல் நடிகராகவும் களமிறங்கி நான், காளி, பிச்சைக்காரன், சைத்தான் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
இவர் கடந்த 2006ம் ஆண்டு 'பாத்திமா' என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மீரா, லாரா என்ற இரு மகள்கள் இருந்தனர். அதில் மூத்த மகள் மீரா அண்மையில் தற்கொலை செய்துகொண்டார்.
உருக்கமான பதிவு
இந்த சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் மகளின் பிரிவின் துயரத்திலிருந்து இன்னும் மீள முடியவில்லை என பாத்திமா விஜய் ஆண்டனி தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.
அதில் "மீரா தங்கம் உன் பியானோ நீ எப்போது தொடுவாய் என்று காத்திருக்கிறது. எங்களை விட்டு நீ போய்விட்டாய் என்பதை இன்னும் எங்களால் நம்பமுடியவில்லை. ஒரு வேலை இந்த உலகம் உனக்கானது இல்லை போல. ஆனால் அம்மா இன்னும் இங்கு தான் இருக்கிறேன்.
வாழ்வுக்கும் இறப்பிற்குமான அந்த கான்செப்ட்டை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. எனக்கு எதுவுமே புரியவில்லை. அம்மா மீண்டும் உன்னை பார்க்கும் வரை நன்றாக சாப்பிட்டு, சந்தோஷமாக இரு, லாரா உன்னை மிகவும் மிஸ் செய்கிறாள்" என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.