"16 வருஷம்தான் இருப்பேன்னு தெரிஞ்சிருந்தா" - மகள் குறித்து கண்ணீர் பதிவு

Vijay Antony
By Karthick Oct 09, 2023 03:54 PM GMT
Report

தனது மகளை இழந்து வாடும் விஜய் ஆண்டனியின் மனைவி மகள் குறித்து பதிவிட்டுள்ளது ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

விஜய் ஆண்டனி

இசையமைப்பாளராக வெற்றி கொடி நாட்டிய விஜய் ஆண்டனி பிறகு "நான்" படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகினார். வித்தியசானமான பட கதைகளும், அதற்கு வித்தியாசமான டைட்டிலும் வைத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

"16 வருஷம்தான் இருப்பேன்னு தெரிஞ்சிருந்தா" - மகள் குறித்து கண்ணீர் பதிவு | Fathima Vijay Antony Post About Her Daughter

அண்மையில் இவர் நடிப்பில் வெளியான "ரத்தம்" படம் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. சினிமா துறையில் ஏற்ற இறக்கங்களுடன் செல்லும் இவரது தனிப்பட்ட வாழ்க்கை பெரும் அதிர்ச்சியை சந்தித்து நாம் அனைவரும் அறிந்ததே. அண்மையில் இவருடைய மகள் லாரா ஆண்டனி அவரது அறையில் தற்கொலை செய்துகொண்டார்.

என் பொண்ணு தம் அடிச்சா உனக்கென்ன விசித்ரா!! வரிந்து கட்டிக்கொண்டு வந்த வனிதா!!

என் பொண்ணு தம் அடிச்சா உனக்கென்ன விசித்ரா!! வரிந்து கட்டிக்கொண்டு வந்த வனிதா!!


பெரும் அதிர்ச்சியை கொடுத்த இந்த சம்பவத்தில் இருந்து நடிகர் விஜய் ஆண்டனிக்கு ரசிகர்களும், திரை துறையினரும் பெரும் ஆதரவை அளித்து வருகின்றார்.

விஜய் ஆண்டனி மீண்டும் திரைப்படங்களுக்கு திரும்பியுள்ள நிலையில், அவரது மனைவி பாத்திமா விஜய் ஆண்டனியின் பதிவு தற்போது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்து அவர் வெளியிட்டு இருக்கும் ட்விட்டர் பதிவில், " நீ பதினாறு வருஷம்தான் இருந்திருப்பாய் என தெரிந்திருந்தால் உன்னை என்னிடமே வைத்திருந்திருப்பேன். சூரியனுக்கும் நிலவிற்கும்கூட காட்டியிருக்கமாட்டேன்.. உன் நினைவுகளால் நான் சோகத்தில் மூழிகியிருக்கிறேன்.. நீ இல்லாமல் எங்களால் இருக்க முடியவில்லை. சீக்கிரம் அப்பா மற்றும் அம்மாவிடம் திரும்பி வந்துவிடு, லாரா உனக்காக காத்துக்கொண்டே இருக்கிறாள்.. லவ் யூ தங்கம் " என பதிவிட்டிருக்கிறார்.