13 வயது சிறுமி 5 மாத கர்ப்பம் - தந்தையின் நண்பர் வெறிச்செயல்!
தந்தையின் நண்பர், மகளை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் வன்கொடுமை
சேலம் குரங்கு சாவடி பகுதியைச் சேர்ந்தவர் கட்டட தொழிலாளி. இவருக்கு 13 வயதில் மகள் ஒருவர் உள்ளார். இந்த மாணவி அரசுப் பள்ளி ஒன்றில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டதால் பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்து பார்த்தபோது மாணவி ஐந்து மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் புகாரளித்துள்ளனர். அதன் படி, விசாரணை நடத்தியதில்,
சிறுமி கர்ப்பம்
மாணவி, தந்தையின் நண்பர் ஞானமூர்த்தி என்பவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறியுள்ளார். தொடர்ந்து மாணவியின் தந்தையின் நண்பரிடம் விசாரித்ததில் அவர் உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார்.
அதனையடுத்து அவரின் மீது போக்சோவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.