அப்படி சொல்லி சொல்லியே... பலமுறை பாலியல் வன்கொடுமை - தந்தை வெறிச்செயல்!
பெற்ற மகளை, தந்தை பல முறை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் வன்கொடுமை
மகாராஷ்டிரா, மும்ப்ரா பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் தாயை இழந்த நிலையில், தந்தையும் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், போலீஸில் அதிர்ச்சி புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதில், அவரது தந்தை, சிறுமியிடம் நீ பிறந்த போதே உனது தாய் இறந்து விட்டார் என கூறி அவரை மன வேதனைக்குள்ளாக்கி பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். இவ்வாறு அடிக்கடி கூறி சிறுமிக்கு தொந்தரவு அளித்து வந்துள்ளார்.
தந்தையின் கொடூரம்
இரு கட்டத்திற்கு மேல் பொறுக்கமுடியாத சிறுமி துணிச்சலாக போலீஸில் புகார் அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து போலீசார், சிறுமியின் தந்தையை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
ஒரு வாரத்திற்கு போலீசாரின் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.