மகனை மரத்தில் கட்டிவைத்து அடித்தே கொன்ற தந்தை - மனைவி பேச்சை கேட்ட ஆத்திரம்!
மகனை மரத்தில் கட்டிவைத்து தந்தை அடித்தே கொன்றுள்ளார்.
வீடு தகராறு
கரூர், ஜெகதாபியை சேர்ந்தவர் மனோகரன். இவர் டிரைவராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி சுதா என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் இருக்கின்றனர்.
இந்நிலையில், இவர் சேலம் சென்றிருந்ததாக கூறப்படுகிறது. அந்த சமயத்தில் மனோகரன் வீட்டிற்கு நேர் எதிரே அவருடைய தந்தை மாணிக்கம் புதியதாக வீடு கட்டும் பணியை தொடங்கியுள்ளார்.
இதுதொடர்பாக, ஏற்கனவே தந்தை மகனுக்கு இடையே சண்டை இருந்து வந்துள்ளது. இதனால் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மனோகரனின் மனைவி சுதா, தனது கணவர் வந்த பின்பு வீடு கட்டும் பணியை தொடங்குமாறு கூறியுள்ளார்.
மகன் கொலை
இதனால் ஆத்திரமடைந்த மாணிக்கம் மதுபோதையில் மருமகளை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். உடனே, இதுகுறித்து சுதா கூறியதை தொடர்ந்து, ஆத்திரமடைந்த மனோகரன் தந்தையுடன் சண்டையிட்டுள்ளார்.
இதனால் கோபத்தில் மாணிக்கம் தனது மகள் வழி பேரன் மணிராஜை வரவழைத்து, மனோகரனை அருகிலுள்ள மரத்தில் கட்டி வைத்து தாக்கியதில், மனோகரன் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும், சுதா இதனை வெளியே கூறினால் உன்னையும் கொன்று விடுவேன் என மிரட்டியதாகவும் தெரிகிறது.
அதன்பின், நெருங்கிய உறவினர்களை அழைத்து மகன் விபத்தில் இறந்துவிட்டான் எனக்கூறி அழுதுள்ளனர். இதற்கிடையில், சுதா போலீஸில் புகாரளித்துள்ளார். உடனே விரைந்த போலீஸார் விசாரணை நடத்தி, வழக்கு பதிவு செய்து மாணிக்கம் மற்றும் மணிராஜை கைது செய்துள்ளனர்.