பெண்ணை அரை நிர்வாணமாக்கி மரத்தில் கட்டி வைத்து தாக்குதல் - குடும்பத்துடன் காதலன் வெறிச்செயல்!
பெண்ணை அரை நிர்வாணமாக்கி மரத்தில் கட்டி வைத்து பேர் சேர்ந்து அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெண் மீது தாக்குதல்
ஜார்கண்ட் மாநிலம் கிரிதிஹ் மாவட்டத்தில் உள்ள சரியா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 26 வயதுடைய பெண் ஒருவர் வசித்து வருகிறார். இந்த பெண் ஒரு நபருடன் முறையற்ற தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அந்த நபர் அவரின் குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேருடன் சேர்ந்து புதன் கிழமை இரவு 11 மணியளவில் மோட்டார் சைக்கிளில் பெண்ணின் வீட்டருகே வந்துள்ளனர். பெண்ணை போன் செய்து வீட்டை விட்டு வெளியே வர சொல்லியுள்ளனர்.
பின்னர் அந்த பெண்ணை கடத்தி ஆளில்லாத காட்டுப் பகுதிக்கு கொண்டு சென்று ஆடையை கிழித்து அரை நிர்வாணமாக்கி மரத்தில் கட்டி வைத்து இரவு முழுவதும் கொடூரமாக தாக்கியுள்ளனர்.
குற்றவாளிகள் கைது
சம்பவம் அறிந்து அங்கு வந்த போலீசார் பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் வெறிச்செயலில் ஈடுபட்ட 4 போரையும் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.