மகளை காண கண்டம் விட்டு கண்டம் சென்ற தந்தை - அதிர்ச்சியடைந்து கண்ணீர் சிந்திய மகள்..!
கன்னடாவில் பணியாற்றும் தனது மகளை காண இந்தியாவில் இருந்து சென்று மகளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் தந்தை.
மகளை காண கண்டம் விட்டு கண்டம் சென்ற தந்தை
கனடாவில் வேலை பார்த்து வரும் இந்தியாவைச் சேர்ந்த ஸ்ருத்வா தேசாய் என்ற மாணவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவு செய்துள்ளார்.
அதில் மகளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்த ஸ்ருத்வா தேசாயின் தந்தை இந்தியாவில் இருந்து கனடா வரை பயணம் செய்துள்ளார்.
ஸ்ருத்வா தேசாய் தனது தந்தையை பார்த்தவுடன் உணர்ச்சிவசப்பட்டு கட்டிப்பிடித்து ஆனந்த கண்ணீர் விட்ட காட்சிகள் வீடியோவில் இடம் பெற்றிருந்தன.

இணையத்தில் வைரல்
இந்த வீடியோவை 10.6 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர்.
வீடியோ காட்சிகளை பார்த்த பயனர்களில் ஒருவர் இந்த காட்சி கண்களை ஈரமாக்குகிறது. எந்த தந்தையும் தன் மகளை விட்டு பிரிந்துவிடக்கூடாது என்று ஆசைப்படுகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.