மழையோ..புயலோ..என்னை ஏதும் செய்யாதே - 50 கிமீ நடந்தே மகள் திருமணத்திற்கு சென்ற தந்தை!

United States of America World
By Swetha Oct 03, 2024 01:00 PM GMT
Report

மகளின் திருமணத்தில் கலந்துக்கொள்ள 50 கி.மீ தூரம் தந்தை நடந்து சென்றுள்ளார்.

50 கிமீ 

அமெரிக்காவில் தனது மகளின் திருமணத்தில் பங்கேற்பதற்காக புயல் மழைக்கு மத்தியில் 50 கி.மீ தூரம் நடந்து சென்ற தந்தை, இந்த ஆண்டின் சிறந்த தந்தையாக தேர்வாகியுள்ளார். அந்த தந்தையின் பெயர் டேவிட் ஜோன்ஸ்.

மழையோ..புயலோ..என்னை ஏதும் செய்யாதே - 50 கிமீ நடந்தே மகள் திருமணத்திற்கு சென்ற தந்தை! | Father Walks 50 Km To Attend Daughters Wedding

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள ஜான்சன் சிட்டியில் வசித்து வருகிறார். அவரது மகள் எலிசபெத்துக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமணத்துக்கு முந்தைய நாள் அவர் வேறொரு பகுதியில் இருந்தார்.

தந்தை வசிக்கும் பகுதிக்கும் மகள் இருக்கும் பகுதிக்கும் இடையே உள்ள தூரம் 50 கி.மீ. ஆகும். ஆனால் அந்த பகுதிக்கு காரில் செல்ல வேண்டுமென்றால் 2 மணி நேரம் ஆகும். ஆனால் அந்த சமயம் அங்கு பெய்த புயல் மழை காரணமாக போக்குவரத்து தடைபட்டது.

இதனால் திருமணம் நடைபெற்ற பகுதிக்கு கார் உள்ளிட்ட வாகனங்களில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இருப்பினும் மகளின் திருமண விழாவில் பங்கேற்பதில் டேவிட் ஜோன்ஸ் தீவிரமாக இருந்தார். மாரத்தான் வீரரான ஜோன்ஸ், இயற்கை பேரிடரை கண்டு பயப்படவில்லை.

மகளுக்கு திருமணம்; இந்த நேரத்தில் 2வது குழந்தைக்கு ரெடி - ரோபோ சங்கர் பளீச்

மகளுக்கு திருமணம்; இந்த நேரத்தில் 2வது குழந்தைக்கு ரெடி - ரோபோ சங்கர் பளீச்

மகள் திருமணம்

மகளின் திருமணத்தில் பங்கேற்க அங்கிருந்து 50 கி.மீ. தூரம் நடந்தே செல்ல முடிவு எடுத்தார். அந்த பயணத்துக்கு தேவையான சில அத்தியாவசிய பொருட்களை எடுத்துக்கொண்டு நடக்க தொடங்கினார்.

மழையோ..புயலோ..என்னை ஏதும் செய்யாதே - 50 கிமீ நடந்தே மகள் திருமணத்திற்கு சென்ற தந்தை! | Father Walks 50 Km To Attend Daughters Wedding

கடும் புயல், மழைக்கு மத்தியில் பெரும் சோதனைகளை அனுபவித்து, சுமார் 12 மணி நேரத்தில் தனது மகளின் திருமணம் நடைபெற்ற இடத்தை அடைந்தார். அவரை பார்த்ததும் அவரது மகள் எலிசபெத் ஆனந்த கண்ணீர் வடித்தார்.

மகளின் திருமணத்தில் பங்கேற்க கடும் புயல், மழைக்கு மத்தியில் 50 கி.மீ. தூரம் நடந்து சென்ற தந்தை அனைவருக்கும் ஹீரோவாக பார்க்கப்படுகிறார். மேலும் இந்த ஆண்டின் சிறந்த தந்தை எனவும் பெயரெடுத்தார்.