பெற்ற மகளுக்கே பாலியல் வன்கொடுமை - மறுத்ததால் கல்லால் அடித்தே கொன்ற கொடூர தந்தை!
பாலியல் வன்கொடுமையை எதிர்த்த மகளை தந்தை கொலை செய்துள்ளார்.
பாலியல் வன்கொடுமை
தெலங்கானா, மியாப்பூருக்கு நபர் ஒருவர் மனைவி மற்றும் 12 வயது மகளுடன் குடியேறியுள்ளார். இதில் தந்தை மதுவுக்கு அடிமையாக இருந்துள்ளார்.
இந்நிலையில் அந்த நபர் மகளை கடைக்கு அழைத்துச் செல்வதாக சென்று பொருட்களை வாங்கிய பின்னர் வீடு திரும்பிய போது வீட்டிற்கு செல்லாமல் காட்டு பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார். மேலும் மகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
இதனை அறிந்துக்கொண்ட சிறுமி அதனை தடுத்து அம்மாவிடம் கூறிவிடுவதாக அழுதப்படியே தெரிவித்துள்ளார். இதனால் பயந்த நபர் மகளை கல்லால் அடித்தே கொன்றுள்ளார்.
தந்தை வெறிச்செயல்
அதன்பின் மனைவியோடு சேர்ந்து மகளை காணவில்லை என காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். தொடர்ந்து, அழுகிய நிலையில் சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அதனையடுத்து போலீஸார் அப்பகுதியில் சிசிடிவியை ஆராய்ந்ததில் தந்தையுடன் மகள் சென்றிருப்பது தெரிய வந்தது.
உடனே தந்தையிடம் விசாரித்ததில் மானம் போய்விடும் என்ற பயத்தில் மகளை கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் அடிப்படையில், அவரை கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.