கைகோர்த்தபடி சென்று தண்டவாளத்தில் படுத்த தந்தை மகன் - பதற வைக்கும் காட்சி
தந்தை-மகன் இருவரும் ரயில் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா
மகாராஷ்டிரா பால்கர் மாவட்டத்தில் உள்ள பயந்தர் நிலையம் திங்கள்கிழமை காலை 10 மணியளவில் தண்டவாளத்தில் இரு சடலங்கள் இருப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. சடலங்களை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
[0HXQS
இதன்பின், வழக்குப்பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணையை தொடங்கினர். காலை 9.30 மணி அளவில் 60 வயது மதிக்கத்தக்க முதியவரும், 35 வயது மதிக்கத்தக்க நபரும், ரயில் நிலைய நடைமேடையில் பேசியபடி நடந்து செல்கிறார்கள்.
கடன் சுமை
அப்பொழுது எதிர்திசையில் மின்சார ரயில் ஒன்று வருவதை பார்த்து, இருவரும் கைகளைக்கோர்த்தப்படி நடந்துச்சென்று தண்டவாளத்தில் படுகின்றனர். அந்த ரயில் அவர்களின் மேல் ஏறிச்செல்கிறது. விசாரணையில், இறந்தவர்கள் ஜெய்மேதா(45) ஹரிஷ்மேதா(60) இருவரும் தந்தை மகன் என்பது தெரியவந்துள்ளது.
பங்குசந்தையில் ஏற்பட்ட நஷ்டத்தால் கடன் சுமை அதிகரித்து அதனால் தற்கொலை செய்துள்ளார்கள் என தெரிய வந்துள்ளது. இவர்கள் நடந்து சென்று தண்டவாளத்தில் படுக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.