தாயின் 3வது கணவர் செய்த கொடூரம் - மகள் கதறியும் கண்டுகொள்ளாத தாய்!
மகளை, தாயின் 3வது கணவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் வன்கொடுமை
நீலகிரி, குன்னூரைச் சேர்ந்தவர் 40 வயது பெண். இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். தொடர்ந்து, கருத்து வேறுபாட்டால் 2 கணவர்களை பிரிந்து, 3வது திருமணம் செய்துள்ளார்.
இருவரும் அதே பகுதியில் கூலித் தொழிலுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில், வழக்கம்போல் 3-வது கணவர் வேலை முடிந்து வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, வீட்டில் தனியாக இருந்த 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
கண்டுகொள்ளாத தாய்
மேலும், இதனை வெளியே சொல்லக்கூடாது என மிரட்டியுள்ளார். இருப்பினும் கொடுமை தாங்காமல் சிறுமி தனது தாயிடம் சம்பவத்தை கூறி அழுதுள்ளார். ஆனால் தாயும் இதனை வெளியில் சொல்ல வேண்டாம் என்று கூறியதாக கூறப்படுகிறது.
பின், சிறுமி, இதுகுறித்து தனது பள்ளியின் ஆசிரியை மூலம் 1098 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு நடந்த சம்பவம் குறித்து புகாரளித்துள்ளார்.
உடனே, குழந்தைகள் பாதுகாப்பு நல அதிகாரிகள் மற்றும் குன்னூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி சிறுமியின் வளர்ப்பு தந்தை மற்றும் தாய் மீது வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள இருவரையும் தேடி வருகின்றனர்.

யாழில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய உதவி பிரதேச செயலாளரின் மரணம்...! மீண்டும் ஆரம்பமாகும் விசாரணை IBC Tamil

எந்த விடயத்திலும் perfection பார்க்கும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
