17 வயது சிறுவன் செய்த செயல்; அலறியடித்து ஓடிய மக்கள் - ஷாக் பின்னணி!
17 வயது சிறுவன் போதையில் செய்த செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிறுவன் செயல்
மதுரை, மாநகர் செல்லூர் பகுதியில், 17 வயது சிறுவன் ஒருவர் போதையில் இருந்துள்ளார். தொடர்ந்து, நள்ளிரவில் பொக்லைன் வாகனத்தை கண்மூடித்தனமாக ஓட்டிச் சென்ற அந்த சிறுவன்,
சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள், ஆட்டோக்கள், பைக்குகள் உள்ளிட்டவற்றின் மீது மோதியுள்ளார். இவ்வாறு செல்லூர் 50 அடி சாலையில் இருந்து
வாகனங்கள் சேதம்
கண்மாய்கரை சாலை வரை அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலையோரம் நின்ற வாகனங்களை இடித்து நொறுக்கியதில் வாகனங்கள் சேதமடைந்தன. இதில், இரும்பு கடை ஒன்றில் தூங்கிக் கொண்டிருந்த காவலாளி விபத்திலிருந்து நூலிழையில் உயிர் தப்பியுள்ளார்.
ஒருகட்டத்தில் ஆட்டோக்கள் மீது மோதி நின்றபோது அந்த சிறுவனைப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில், வாகனங்கள் சேதமடைந்ததால் பாதிக்கப்பட்டுள்ள உரிமையாளர்கள், அவற்றைச் சரிசெய்து தரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எந்த விடயத்திலும் perfection பார்க்கும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

ஆரம்பமாகும் ராகு கேது பெயர்ச்சி: இனி 1 1/2 வருடத்திற்கு இந்த ராசிகள் எச்சரிகையுடன் இருங்கள் Manithan
