மகள் கேட்ட அந்த ஒரே ஒரு கேள்வி - சாகும் தருவாயில் கேன்சரிலிருந்து மீண்ட தந்தை!
மகள் கேட்ட ஒரே ஒரு கேள்வியால் தந்தை ஒருவர் புற்றுநோயில் இருந்து மீண்டுள்ளார்.
மகளின் கேள்வி
பிரபல மார்க்கெட்டிங் வல்லுநர் அர்ஜுன் சென். அமெரிக்காவில் வசித்து வருகிறார். இவர் திடீரென அலுவலக மீட்டிங்கின்போது ரத்த வாந்தி எடுத்துள்ளார்.
உடனே, பரிசோதனை செய்ததில் அவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. மேலும், இன்னும் 100 நாட்கள் மட்டுமே உங்களால் இந்த பூமியில் உயிர் வாழ முடியும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி யாரிடமும் பேசுவதையே முற்றிலும் தவிர்த்துவிட்டார்.
மீண்ட தந்தை
இந்நிலையில், "அப்பா, நீங்கள் கொஞ்சம் கொஞ்சமாக இறந்து கொண்டிருக்கிறீர்களா? என் திருமணத்திற்கு நீங்கள் வருவீர்களா?" என அவரது இளம் மகள் கேட்டுள்ளார். இந்தக் கேள்விகள் அவருக்குள் போராட வேண்டும் என்ற உறுதியை தூண்டியது.
ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை பின்பற்ற ஆரம்பித்தார். மருத்துவ முறைகளை கண்டிப்புடன் பின்பற்றினார். முழு ஆற்றலையும் நோயிலிருந்து மீள்வதற்காக செலுத்தினார். அவரது உடல்நிலை கொஞ்சம் கொஞ்சமாக மேம்படத் தொடங்கியது.
அவருக்கு புற்றுநோய் கண்டுபிடிக்கப்பட்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஆன நிலையில், தற்போது அர்ஜுன் சென் நலமாக உள்ளார். இவருடைய வாழ்க்கைக் கதை, அபிஷேக் பச்சன் நடித்த ஐ வாண்ட் டு டாக் (I Want to Talk) என்ற திரைப்படமாக வெளிவந்தது.