மகன் கண் எதிரே தந்தை சரமாரியாக வெட்டி கொலை - நிகழ்ந்த கோர சம்பவம்!
சென்னையில் மகனின் கண் முன்னே தந்தையை மர்ம கும்பல் வெட்டி கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொலை
சென்னையில் ஆதம்பாக்கத்தில் உள்ள அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீனிவாசன், இவருக்கு 10-ம் வகுப்பு படிக்கும் ஒரு மகன் உள்ளார்.
இவர் தனது மகனுடன் இவர்கள் உறவினர்கள் துக்க நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார்.
அப்பொழுது, ஆட்டோ மற்றும் 3 இருசக்கர வாகனங்களில் வந்த 8 பேர் கொண்ட மர்ம கும்பல் ஸ்ரீனிவாசனை பயங்கர ஆயுதங்களால் அவரது மகன் முன்னிலையில் தாக்கியுள்ளனர்.
இதனை கண்ட அவரது மகன் தடுக்கச் சென்ற போது அவரையும் அந்த கும்பல் கத்தியால் தாக்கியதில் படுகாயமடைந்த அவர் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவரது தந்தைக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விசாரனை
இந்நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இதில் கொலையான சீனிவாசன் மீது 2 கொலை வழக்குகள் உள்ளதாகவும், கடந்த 2021 ஆம் ஆண்டு ஆதம்பாக்கம் ரவுடி நாகூர் மீரான் கொலை வழக்கில் சிறைக்கு சென்று வந்தவர் என்பதும் தெரியவந்தது.
இதற்காக பழி வாங்கும் நோக்கத்தில் கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும், அந்த மர்ம கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.