மகனின் தலையை வெட்டி பையில் வைத்து சுற்றிய தந்தை - நிகழ்ந்த கொடூர சம்பவம்!
தன் சொந்த மகனை வெட்டி தலையை பையில் வைத்து தந்தை சுற்றி திரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தந்தை மகன் தகராறு
ஆந்திர மாநிலம் நகரிக்கல்லு அருகே குள்ளப்பாவை என்ற ஊரை சார்ந்தவர் வீரய்யா, இவர் ஒரு கூலி தொழிலாளி. இவரது மனைவி அலிவேலம்மா, இவர் குவைத்தில் வீடு வேலை செய்து வருகிறார்.
இந்த தம்பதியின் மகன் அசோக், 25 வயது மற்றும் ஒரு மகளும் உள்ளனர், இருவரும் திருமணம் ஆனவர்கள்.
தொடர்ந்து அசோக்கின் மனைவி லட்சுமி பிரசவத்திற்காக தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். அதனால் தந்தையும் மகனும் மட்டும் தனியாக வீட்டில் உள்ளார்.
அப்போது 4 நாட்களுக்கு முன்பு வெளிநாட்டில் வேலை பார்த்து கொண்டிருக்கும் தாய் 5000ரூ அனுப்பி வைத்தார்.
அதில் குடிப்பதற்காக காசு வேண்டும் என மகனிடம் கேட்டுள்ளார், மகன் தர மறுத்ததால் இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.
கொடூர கொலை
இந்நிலையில், இருவரும் தனித்தனியாக சென்று குடித்தனர், பிறகு மீண்டும் இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டது.
அப்போது மகன் தந்தையை அடிக்க, தந்தை அருகில் இருந்த ஒரு கல்லை தூக்கி அவர் தலையில் போட்டுள்ளார்.
அதில் பலத்த காயமடைந்தனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், அவர் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மகனின் தலையை வெட்டி ஒரு பையில் போட்டுகொண்டு சுற்றியுள்ளார்.
பின்னர் அப்பகுதியில் உள்ள மதுக்கடைக்கு சென்று மகனின் தலையை மேஜையில் வைத்தபடி மது வாங்கி குடித்தார்.
இதனை அறிந்த போலீசார் குடித்து கொண்டிருந்த வீரய்யாவை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.