ஆண் குழந்தைக்காக டார்ச்சர் செய்த கணவன் - வெறுப்பில் பெண் குழந்தையை அடித்தே கொன்ற கொடூரம்!

Attempted Murder Andhra Pradesh
By Vinothini Jun 05, 2023 06:41 AM GMT
Report

ஆந்திராவில் ஒருவர் ஆண் குழந்தை வேண்டும் என்று மனைவியை டார்ச்சர் செய்தது மட்டும் இல்லாமல் தனது பெண் குழந்தைக்கு செய்த கொடூர செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கணவனின் டார்ச்சர்

ஆந்திர மாநிலம், விஜயவாடா மாவட்டத்தில் உள்ள மங்களகிரியை பகுதியை சேர்ந்தவர் கோபி, இவரது மனைவி மௌனிக்கா.

இவர்களுக்கு ஆண் குழந்தை வேண்டும் என ஆசைப்பட்டு தற்போது, 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

father-murdered-daughter-for-boy-child

இவர் மேலும், ஆண் குழந்தை தான் வேண்டும் என மனைவியை டார்ச்சர் செய்துள்ளார். மேலும், அவர் இந்த கோபத்தினால் தனது 2 வயது பெண் குழந்தையின் காலை பிடித்து சுவற்றில் அடித்துள்ளார்.

அதில் படுகாயம் அடைந்த குழந்தையை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கொடூர கொலை

இந்நிலையில், இவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இவரை ஜாமீனில் எடுப்பதற்காக இவரது உறவினர் சாய் சந்தீப் முயன்றுள்ளார்.

father-murdered-daughter-for-boy-child

இதனை கோபியின் மாமனார் சத்யா நாராயண மற்றும் அவரது மகன் வெங்கட் கிருஷ்ணா ஆகியோர் தடுத்தனர்.

இதனால் கோபமடைந்த சந்தீப் கல்லால் தக்க தொடங்கினர். பின்னர், வெங்கட் கிருஷ்ணா தன்னிடம் இருந்த கத்தியை எடுத்து அவரை விரட்டி கழுத்தை அறுத்தார்.

இதனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.