வரதட்சனை கேட்டு போதை ஊசி போட்டு மனைவியை டார்ச்சர் செய்த கொடூர கணவன்!
திருமங்கலத்தில் வரதட்சனை கேட்டு கணவர் போதை ஊசி போட்டு டார்ச்சர் செய்வதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
மதுரை திருமங்கலம் அண்ணா நகரைச் சேர்ந்தவர் செல்லப்பாண்டி வயது 32 இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி புஷ்பராணி வயது 28 இவர்களுக்கு திருமணமாகி எட்டு ஆண்டுகள் ஆகிறது இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் வாலிபர் செல்ல பண்டி கடந்த சில ஆண்டுகளாக போதைக்கு அடிமையாகி உள்ளார். இவரது நண்பர்கள் தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்கள் மூலம் போதை ஊசி செலுத்தும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனால் போதை ஊசிக்கு அடிமையான செல்லப்பாண்டி தனது மனைவியை சித்திரவதை செய்தும், வரதட்சணையாக ரூபாய் 5 லட்சம் வரை கேட்டு மனைவி புஷ்பராணியை தொந்தரவு செய்துள்ளார். போதை ஊசிக்கு அடிமையான தனது கணவனை போதை மயக்கத்தில் இருந்து காப்பாற்ற முயன்றார் புஷ்பராணி.
இதனால் ஆத்திரமடைந்த செல்லப்பாண்டி தனது மனைவிக்கு போதை ஊசியை செலுத்தி சித்திரவதை செய்துள்ளார். அளவுக்கு அதிகமான போதை ஊசி செலுத்தியதால் அவரது உடலுக்கு பல்வேறு உபாதைகள் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து திருமங்கலம் காவல் துறையினரிடம் கணவன் மீது புஷ்பராணி புகார் செய்துள்ளார். இதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து தலைமறைவாகியுள்ள செல்லப்பாண்டியன் போலீசார் தேடி வருகின்றனர்.
மேலும் செல்லப்பாண்டி போதை ஊசி வழங்கும் அவரது நண்பர்களையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.