கள்ளக்காதலனுடன் ஓடிய மனைவி - 3 குழந்தைகளை கொன்ற தந்தை!
மனைவி கள்ளக்காதலனுடன் ஓடியதால், தந்தை 3 குழந்தைகளை கொன்றுள்ளார்.
தகாத உறவு
தஞ்சாவூர், கோபாலசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த ஹோட்டல் ஊழியர் வினோத்குமார். இவரது மனைவி நித்யா. இவர்களுக்கு 12 மற்றும் 8 வயதில் இரண்டு மகள்கள் மற்றும் 5 வயதில் மகன் இருந்தனர்.
இந்நிலையில், நித்யாவுக்கு மன்னார்குடியை சேர்ந்த ஒருவருடன் சமூக வலைதளம் மூலமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், கடந்த 6 மாதத்திற்கு முன்பு கணவர் மற்றும் குழந்தைகளை விட்டு பிரிந்து,
தந்தை வெறிச்செயல்
தனது கள்ளக்காதலனுடன் நித்யா சென்று விட்டார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மனைவியை சந்தித்து மீண்டும் தன்னுடன் வந்து குடும்பம் நடத்த வருமாறு அழைத்ததாக கூறப்படுகிறது.
ஆனால், மனைவி மறுத்த நிலையில் மன உளைச்சலுக்கும், மதுப்பழக்கத்திற்கும் ஆளான வினோத் 3 குழந்தைகளையும் துடிக்க, துடிக்க சரமாரியாக கழுத்தை அறுத்துக்கொலை செய்தார்.
இதில் மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பிறகு, வினோத்குமார் மதுக்கூர் காவல் நிலையத்தில் சென்று சரணடைந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.