மகன் படித்த அரசுப் பள்ளி - 3 நாள் ஊதியமின்றி கட்டிட பணி செய்த தந்தை!

By Sumathi Aug 20, 2024 06:08 AM GMT
Report

மகன் படித்த அரசுப் பள்ளிக்கு 3 நாள் ஊதியமின்றி தந்தை கட்டிட பணி செய்துள்ளார்.

ஊதியமின்றி வேலை

மதுரையில் எழுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு கட்டிட மராமத்து வேலைகளை பார்க்க இப்பள்ளியில் படித்த மாணவனின் தந்தையும்,

அழகுமுருகன்

உத்தப்புரத்தைச் சேர்ந்த கட்டிட பணியாளருமான அழகுமுருகனிடம் தலைமை ஆசிரியர் தனபால் வேலை பார்க்கச் சொல்லியுள்ளார். தொடர்ந்து 3 நாட்கள் வேலை நடந்துள்ளது. அதற்கான கூலியை தலைமையாசிரியர் வழங்கியுள்ளார்.

47 வயதில் கல்லூரிக்கு சென்று படிக்கும் பெண் - ஆசையை நிறைவேற்றிய தமிழக அரசு!

47 வயதில் கல்லூரிக்கு சென்று படிக்கும் பெண் - ஆசையை நிறைவேற்றிய தமிழக அரசு!

நெகிழ்ச்சி சம்பவம்

அப்போது மாணவனின் தந்தை கூலி வேண்டாமென்றும் இப்பள்ளிக்கு என்னால் முடிந்த உதவியாக இது இருக்கட்டும் என்று பணத்தை வாங்க மறுத்துள்ளார். இதுகுறித்து அழகுமுருகன் பேசுகையில், “எனது மகன் பீமன் இப்பள்ளியில் கடந்தாண்டு பிளஸ் 2 படித்துவிட்டு தற்போது திண்டுக்கல் காந்திகிராம் கிராமிய நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் பி.ஏ. படிக்கிறார்.

மகன் படித்த அரசுப் பள்ளி - 3 நாள் ஊதியமின்றி கட்டிட பணி செய்த தந்தை! | Father Masonry Work 3 Days Without Pay For Son

எனது மகனின் கல்வி வளர்ச்சிக்கு உதவிய பள்ளிக்கு ஏதோவொரு வகையில் உதவி செய்யவேண்டும் என எண்ணினேன். அதனால் கூலி வாங்காமல் வேலை பார்த்தது மனதுக்கு மகிழ்ச்சியாக உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், ஆசிரியர் முருகேசன் கூறுகையில், “மாணவர் பீமன் பிளஸ் 2 தேர்வு விடுமுறை நாட்களில் பள்ளிக்கு வந்து பூச்செடிகள், மரங்கள் நட்டு வளர்த்தார்.

இதை அறிந்த தனியார் நிறுவனம் இவரது உயர் கல்விக்கு ரூ.25 ஆயிரம் வழங்கியுள்ளது” எனக் கூறியுள்ளார்.