வேலைக்கு செல்லாமல் ஓப்பியடித்த மகன் - கோபத்தில் தந்தை செய்த கொடூரம்!

Attempted Murder Cuddalore
By Vinothini May 26, 2023 05:28 AM GMT
Report

கள்ளக்குறிச்சி அருகே வேலைக்கு செல்லாமல் இருந்த மகனை கோபத்தில் தந்தை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஓப்பியடித்த மகன்

கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே கொடிக்களம் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் கூலி தொழில் செய்து வருகிறார், இவருக்கு 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர்.

father-killed-his-son-in-thittakudi

இதில் 2-வது மகனுக்கும், 3-வது மகளுக்கும் திருமணம் முடிந்துள்ளது, மூத்த மகனான விநாயகம் மற்றும் கடைசி மகளும் இன்னும் திருமணம் நடைபெறவில்லை.

இதில் மூத்த மகன் வேலைக்கு செல்லாமல் சாமியார் வேடம் அணிந்து கொண்டு திறந்துள்ளார்.

மேலும், இவர் அடிக்கடி மது அருந்தி விட்டு ரகளையில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனை பல முறை இவரது தந்தை கண்டித்துள்ளார்.

கொடூர செயல்

இதனை தொடர்ந்து, அவர் மது அருந்தி விட்டு வேலைக்கு செல்லாமல் தந்தை பேச்சையும் கேட்காமல் திறந்துள்ளார்.

father-killed-his-son-in-thittakudi

இதனால் இவரது தந்தை பலமுறை கண்டித்தும் கேட்காததால், ஆறுமுகம் தனது வீட்டில் இருந்த கத்தியை எடுத்து அவரை சரமாரியாக குத்தி கொலை செய்ததாக கூறப்படுகிறது.

மேலும், அவர் இதனை யாருக்கும் தெரியாமல் மறைப்பதற்காக அவரை அடக்கம் செய்ய முயற்சித்துள்ளார்.

இது குறித்து அறிந்த ஆவினன்குடி காவல் துறையினர், விரைந்து வந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இவரின் தந்தையை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த பகுதியில் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.