கடலூர் மாவட்டத்தில் முழு அடைப்பு - பாமகவினர் 55 பேர் கைது
கடலூரில் இன்று கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த நிலையில் பாமகவை சேர்ந்த 55 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பா.ம.க எதிர்ப்பு :
கடலூர் நெய்வேலி நிலக்கரி சுரங்கமாக எனெல்சிக்கு சுரங்க விரிவாக்க பணிகளுக்காக நிலங்களை கையகப்படுத்தும் அரசாங்கம் அங்கு வாழும் மக்களுக்கு போதிய இழப்பீடு வழங்கவில்லை எனக் கூறி பாமகவினர் மற்றும் அதிமுகவினர் பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பா.ம.க இன்று கடலூர் மாவட்டத்தில் என் எல் சி சுரங்கத்திற்கான நிலங்கள் கையகப்படுத்துவதற்கு எதிராக முழு கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.
கைது நடவடிக்கை
இந்த நிலையில் போராட்டத்தின் போது அசாம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாமகவை சேர்ந்த 55 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அதே சமயம் இன்று பலத்த பாதுகாப்புடன் பெரும்பாலன கடைகள் திறக்கப்பட்டன.