மகனின் வாயில் பேப்பரை திணித்து கொலை; பெற்ற தந்தை வெறிச்செயல் - என்ன காரணம்?
மகனின் வாயில் பேப்பரை திணித்து தந்தை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகன் கொலை
மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் பெண் ஒருவர் தனது 9 வயது மகனுடன் வசித்து வந்துள்ளார். தனது கணவன் குடிபோதைக்கு அடிமையானதால், இவர் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இதனிடையே அந்த பெண்ணின் 9 வயது மகன் திடீரென காணாமல் போயுள்ளார்.
இதனால் அந்த சிறுவனின் உறவினர்கள் ஊர் முழுவதும் தேடிவந்துள்ளது. இந்நிலையில், வாயில் பேப்பர் அடைக்கப்பட்டபடி சிறுவனின் உடல் அவரது தந்தையின் வீட்டின் அருகில் பிணமாக கிடந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தந்தை கைது
இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், மகனை அவரது தந்தை வீட்டுக்கு அழித்து வந்துள்ளார். பின்னர் நோட்டுப் புத்தகத்திலிருந்து பேப்பர்களை கிழித்து அதை ஒன்று சேர்த்து பந்தாக செய்து மகனின் வாயில் திணித்துள்ளார்.
இதில் அந்த சிறுவன் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மூக்கிலிருந்து ரத்தம் வெளியேறி உயிரிழந்துள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர். மேலும், சம்பவத்தன்று குற்றவாளி குடிபோதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் கொலைக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.