சாக்லேட், பொம்மை கேட்ட 8 வயது மகள் - ஆத்திரத்தில் கல்லால் அடித்து கொடூரமாக கொன்ற தந்தை!
8 வயதான சிறுமி தனது தந்தையிடம் சாக்லேட் மாற்றும் பொம்மை கேட்டதும் மகளென பாராமல் அடித்து கொன்ற கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குடிப்பழக்கம்
மத்தியப் பிரதேச மாநிலம்ன், இந்தூரில் வசித்து வருபவர் 37 வயதான ராகேஷ். இவர் தச்சு வேலை செய்யும் கூலித் தொழிலாளி, இவருக்கு திருமணம் ஆகி 8 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

மேலும், இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். இவர் ஏழ்மையான சூழலில் பொருளாதார நெருக்கடியில் வாழ்ந்து வருகிறார்.
ஆனாலும் குடிப்பழக்கத்திற்கு தீவிர அடிமையாக உள்ளார், இதனால் இவரது மனைவி 3 ஆண்டுகளுக்கு முன்பே இவரை விட்டு பிரிந்தார்.
அதுமட்டுமல்லாமல் அவரது மகளையும் இவருடன் விட்டு சென்றுள்ளார்.
கொடூர கொலை
இந்நிலையில், இவர் தனது மகளுடன் வசித்து வருகிறார். தொடர்ந்து குடிப்பழக்கத்தை விடாமல் தினமும் குடித்து வந்துள்ளார்.
அப்பொழுது ஒருநாள் இவரது மகள் தனக்கு சாக்லேட் மற்றும் பொம்மைகள் வேண்டும் என்று கேட்டுள்ளார்.

அதனை வாங்கி தராமல் இவர் மறுத்துள்ளார், மீன்றும் இவரது மகள் அடம்பிடிக்க தொடங்கினார்.
இதனால் கோபமடைந்த இவர் மகளை கடைக்கு அழைத்து செல்வது போல அழைத்து அங்கிருந்த பாழடைந்த கட்டடத்திற்கு கொண்டு சென்று, சிறுமியின் தலையை அங்கிருந்த டைல்ஸ் மற்றும் கற்களை கொண்டு மோதி கொடூரமாக கொலை செய்துள்ளார்.
இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே பரவி, போலீசார் இவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.