பாதியை திருப்பிக் கொடு - செலவு செய்த பணத்தை முன்னாள் காதலியிடம் கேட்ட காதலன்!
காதலன், முன்னாள் காதலியிடம் செலவு செய்த பணத்தை திரும்பக் கேட்ட சம்பவம் வைரலாகி வருகிறது.
காதல் முறிவு
ஆஸ்திரேலியா, அடிலெய்ட் பகுதியைச் சேர்ந்தவர் அலெக்ஸ். இவர் அய்லே என்ற பெண்ணை காதலித்து வந்தார். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

மேலும், கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். இந்நிலையில், அய்லே வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், முன்னதாக காதலில் இருந்தபோது, அய்லே தன் பணத்தை எடுத்து செலவு செய்ய ஒருபோதும் அலெக்ஸ் அனுமதித்தது கிடையாதாம்.
காதலன் கெடு
காதலியின் மீது இருந்த பிரியத்தால் ஒவ்வொரு முறையும் அவரே பணத்தை எடுத்து செலவு செய்துள்ளார். ஆனால், ஒவ்வொரு முறையும் செய்த செலவுகளை உடனுக்குடன் குறிப்பெடுத்து வைப்பதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.
ஆனால், காதலில் பிரிவு ஏற்பட்ட நிலையில் செய்த செலவுகள் அனைத்தையும் பட்டியலிட்டு, பாதி பணத்தை அனுப்பி வைக்குமாறு அலெக்ஸ் தெரிவித்துள்ளதாக கூறியுள்ளார்.