காதல் எதிர்ப்பு: மகளை அடித்தே கொன்ற அப்பா - ஃபேஸ்புக் லைவில் வெறிச்செயல்!
காதலித்த மகளை, அவரது தந்தை அடித்தே கொன்ற கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
காதல் விவகாரம்
ஆந்திரா, விசாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் பிரசாத். இவருக்கு திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர். ஆனால் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். மகள்கள் தந்தையுடன் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், இவரது மூத்த மகள் வேறு ஒரு சாதியினை சேர்ந்த பையனை காதலிப்பதாக கூறியுள்ளார். இதற்கு பிரசாத் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதனால் அவரது மகள் காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
தந்தை வெறிச்செயல்
இதனால் பாதிக்கப்பட்ட பிரசாத் தனது இளைய மகளை ஆண்களுடன் பேசக்கூடாது, 6 மணிக்குள் வீட்டிற்கு வந்துவிட வேண்டும் என கூறி வளர்த்து வந்துள்ளார். தொடர்ந்து மகளின் நடவடிக்கையில் சந்தேகம் வந்து அவரிடம் விசாரிக்கையில், மகள் காதலிப்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து இருவருக்கும் வாக்குவாதம் அதிகரிக்கவே பிரசாத் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அங்கு மகளை அழைத்து போலீஸார் அறிவிரை கூறி சமாதானம் செய்து தந்தையுடன் அனுப்பி வைத்துள்ளனர். ஆனால், அதனையடுத்து தந்தைக்கும் மகளுக்கும் சமீபத்தில் வாக்குவாதம் முற்றியுள்ளது.
ஃபேஸ்புக் லைவ்
அதில் ஆத்திரத்தில் தந்தை மகளை கடுமையாக அடித்துள்ளார். அதில் நிலைகுலைந்து அவர் கீழே சரிந்துள்ளார். ஆனாலும் தொடர்ந்து அவரை தாக்கியுள்ளார். இதில் அவரது மகள் உயிரிழந்துள்ளார். அந்த வேளையில், ஃபேஸ்புக் லைவ்வில் இச்சம்பவம் குறித்து பிரசாத் பதிவு செய்துள்ளார்.
எனது பேச்சைக் கேட்காமல், காதலித்தார் எனது மகள் நன்றாக படிக்க வைத்தேன் அதை பொருட்படுத்தாமல் அவர் கவனம் சிதறியது, அது எனக்கு பிடிக்கவில்லை. இன்று எனது அம்மாவின் நினைவுநாள். எனவே அவளை இதே நாளில் கொன்றேன் எனக் கூறி சடலத்தைக் காட்டியுள்ளார்.
அன்றுதான் அந்த சிறுமியின் பிறந்தநாளும் கூட.. இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீஸார் விரைந்து வந்