பெற்ற மகளுக்கு தந்தை செய்த கொடூரம் - விசாரணையில் திடுக் தகவல்
மகளை தந்தையே கழுத்தை நெரித்துக் கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
காதல் விவகாரம்
கர்நாடகா, மேல்குந்தா கிராமத்தைச் சேர்ந்த தம்பதி சங்கர் - மல்லம்மா. இவர்களுக்கு 4 பெண் குழந்தைகள். இதில், 18 வயதான மூத்த மகள் கவிதா அப்பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து வந்துள்ளார்.
திடீரென கல்லூரிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இந்நிலையில், அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக குடும்பத்தினர் கூறியுள்ளனர்.
மேலும், போலீசாருக்கு தெரிவிக்காமல் விவசாய நிலத்தில் உடலை எரித்துள்ளனர். இதற்கிடையில், கவிதா, அதே கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்த நிலையில், அவரின் மரணத்தில் சிலர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
தந்தை வெறிச்செயல்
தொடர்ந்து போலீஸார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் கவிதா, ஆட்டோ ஓட்டுநரான மல்லப்பா புஜாரி என்பவரை காதலித்து வந்துள்ளார்.
அவர், வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதையும் மீறி இளைஞருடன் பேசி வந்ததால், வீட்டிற்குள்ளேயே முடக்கி வைக்கப்பட்டுள்ளார். இதனால் வீட்டில் தகராறு ஏற்பட்டதில், கவிதாவை, அவரின் தந்தை அடித்து உதைத்துத்துள்ளார்.
மேலும், அவரை கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். பின் வாயில் விஷத்தை ஊற்றி தற்கொலை செய்ததாக கூறி நாடகமாடியுள்ளார். இதன் அடிப்படையில் பெண்ணின் தந்தை சங்கர் மற்றும் உறவினர்கள் மகாலிங்கப்பா, தத்தப்பா ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.