மகன் மர்ம மரணம்.. 200 பேரை கொன்று குவித்த தந்தை - என்ன காரணம்?

United States of America Death World Murder
By Swetha Dec 14, 2024 01:24 AM GMT
Report

மகன் இறப்பிற்கு 200 பேரை தந்தை கொன்று குவித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மரணம்

உலகில் உள்ள பல மக்கள் மூடநம்பிக்கையை அதிகம் ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள். அதில் மாந்திரீகம் என்பது பெரும் பங்காற்றுகிறது எனலாம். இதுபோன்ற மூடநம்பிக்கை எந்தளவுக்கு உண்மை என்பதை ஆராய்வதைவிட அதை அப்படியே நம்பும் கூட்டம் ஒருபக்கம் இருந்தாலும்,

மகன் மர்ம மரணம்.. 200 பேரை கொன்று குவித்த தந்தை - என்ன காரணம்? | Father Killed Al Most 200 People For Sons Death

மறுபக்கம் அதன் மேல் பெரும் நாட்டமில்லாமல் அதை நம்பாமல் இருக்கும் ஒருக்கூட்டமும் இருக்கும். கரீபியன் கடலில் அமைந்து இருக்கும் ஒரு குட்டி தீவுதான் ஹைதி நாடு. அந்தவகையில், இந்த குட்டி தீவு நாடான ஹைதியில் ஒரு சம்பவம் அதிர்ச்சி சம்பவம் நடந்திருக்கிறது.

மிகவும் சிறிய நாடான இங்கு சுமார் 1.17 கோடி மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நாட்டில் வாழும் ஒரு கேங்ஸ்டரின் மகன் நோய்வாய்ப்பட்டு இறந்திருக்கிறார். இதற்கான காரணம் என்னவென்று அவர் ஒரு வூடு மந்திரவாதியிடம் கேட்டு அறிந்தனர்.

மாணவி மர்ம மரணம் - சூடுபிடிக்கும் சிபிசிஐடி விசாரணை!

மாணவி மர்ம மரணம் - சூடுபிடிக்கும் சிபிசிஐடி விசாரணை!

என்ன காரணம்?

அப்போது, அந்த மந்திரவாதி ‘உள்ளூரில் மந்திரம் தந்திரம் செய்யும் வயதானவர்கள் தான் உங்கள் மகனின் மரணத்திற்கு காரணம்' என்று தெரிவித்துள்ளனர். இதை கேட்டு ஆத்திரமடைந்த அந்த கேங்ஸ்டர் அந்த ஊரில் யாரெல்லாம் மந்திரவாதிகள் இருக்கிறார்களோ

மகன் மர்ம மரணம்.. 200 பேரை கொன்று குவித்த தந்தை - என்ன காரணம்? | Father Killed Al Most 200 People For Sons Death

அவர்களை தேடித்தேடி அவர்கள் அனைவரையும் கொல்ல உத்தரவிட்டிருக்கிறார். அதன் பேரில், ஏறத்தாழ, 200 பேரை கொன்றிருக்கிறார். அதில் பெரும்பாலானோர் 60 முதல் 80 வயதுடையவர்கள் ஆவார்கள். இதனால் அந்த ஊரில் கலவரம் வெடித்தது.

இந்த ஆண்டு மட்டும் இந்த மாந்திரீக நம்பிக்கையால் அங்கு 5000 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். ஹைதி ஒரு சிறிய நாடு என்பதால், சட்டம் வலுவானது கிடையாது. அங்குள்ள கேங்ஸ்டர்கள் அரசை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர்.