மாப்பிள்ளையை மணமேடையிலேயே செருப்பால் அடித்த மாமனார் - வைரல் வீடியோ

Viral Video Marriage
By Sumathi May 11, 2023 08:05 AM GMT
Report

வரதட்சணை கேட்ட மாப்பிள்ளையை மாமனார் செருப்பால் அடித்த சம்பவம் வைரலாகி வருகிறது.

வரதட்சனை விவகாரம்

திருமணங்கள் தொடர்பான பல வீடியோக்கள் தினம் தினம் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன. அதன் வரிசையில், தற்போது வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில், திருமணம் முடிந்தவுடன் மணமகன் உடனடியாக மணமகளை தன்னுடன் அழைத்துச் செல்ல மறுத்துவிடுகிறார்.

மாப்பிள்ளையை மணமேடையிலேயே செருப்பால் அடித்த மாமனார் - வைரல் வீடியோ | Father In Law Beats Bride With Slipper Viral Video

திருமணத்திற்குப் பிறகு தனக்கு வரதட்சணையாக பைக் வழங்க வேண்டும் என்றும், இல்லையெனில் மணப்பெண்ணை அழைத்துச் செல்ல முடியாது என்றும் அவர் கூறுகிறார். மணமகள் வீட்டார் மணமகனிடம் எவ்வளவு கேட்டுக்கொண்டாலும் அவர் தனது நிலைப்பாட்டிலிருந்து அசைவதாக இல்லை.

வைரல் வீடியோ

இதனால் அருகில் நின்றிருந்த மணப்பென்ணின் தந்தைக்கு மாப்பிள்ளையின் செயலால் ஆத்திரம் வந்ததால், செருப்பைக் கழற்றி மாப்பிள்ளையை அடிக்க ஆரம்பிக்கிறார். மணமகனின் கண்களிலிருந்து கண்ணீர் வருவதை கூட காணமுடியும்.

மேலும், தன்னை விட்டுவிடுமாறு அந்த மாப்பிள்ளை தன் மாமனாரிடம் கெஞ்சுமாறு காட்சி இடம்பெற்றுள்ளது. இதற்கு இணையவாசிகள் மாமனாருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.