சிறுமியை காதலிக்க சொல்லி துன்புறுத்திய இளைஞர்- கொடூரமாகக் கொன்று உடலை எரித்த தந்தை!
மகளைத் துன்புறுத்திய இளைஞரை தந்தை கொடூரமாகக் கொன்று உடலை எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா
தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள சங்க ரெட்டி மாவட்டத்தைச் சேர்ந்தவர் 26 வயதான தசரத் (26). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் லாரி ஓட்டுநராக இருக்கும் இவர் கடந்த சில தினங்களுக்கு முன் கணவரைக் காணவில்லை என அவரது மனைவி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி ஒருவரைக் காதல் என்ற பெயரில் துன்புறுத்தி வந்தது தெரியவந்தது. சந்தேகத்தின் பேரில் மாணவியின் தந்தையான கோபாலை காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தசரத், தனது மகளை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறி துன்புறுத்தி வந்துள்ளார்.இதனால் மன உளைச்சல் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் தசரத்தை கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார்.
கொலை
அதன்படி, 12ஆம் தேதி இரவு நிஜாம்பேட்டையில் உள்ள ஒதுக்குப்புறமான இடத்திற்கு வரவழைத்து தசரத்தை கட்டையால் தாக்கி படுகொலை செய்துள்ளார்.பின்னர் உடலில் பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார். அதில் எரிக்கப்படாத நிலையிலிருந்த உடற்பாகங்களை அந்த பகுதியில் உள்ள பாறைகளுக்கு அடியில் மறைத்து வைத்தது தெரியவந்தது.
கோபால் அளித்த தகவலின் அடிப்படையில் தசரத்தின் உடலைக் கண்டுபிடித்த காவல்துறையினர் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட பிறகு உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.மேல் நடவடிக்கைக்காக கோபால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று அந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.