ஐபோனுக்கு வந்த அலர்ட்.. பதறி ஓடிய தந்தை, சடலமாக கிடந்த மகள் - துயர சம்பவம்!
தந்தை ஒருவரை தனது மகளை சடலமாக மீட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொழிலதிபர்
அமெரிக்கா, கலிபோர்னியா பகுதியை சேர்ந்தவர் இயால் வால்ட்மேன். இவர் மெலானக்ஸ் என்ற கணினி விற்பனை நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் கடந்த 2021-ம் ஆண்டு இஸ்ரேலுக்கு குடிபெயர்ந்தார், அவரது 24 வயதான இளைய மகள் டேனிலா நோம் என்பவரை 6 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.
இவர்கள் கடந்த 7-ம் தேதி இஸ்ரேலின் தெற்கு பகுதியில் நடைபெற்ற இசை விழாவில் கலந்து கொண்டனர். அப்போது ஹமாஸ் தீவிரவாதிகள் இசை விழாவில் புகுந்து திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 270 பேர் உயிரிழந்தனர், இந்த தாக்குதல் நடந்தபொழுது இவர்கள் இருவரும் காரில் தப்பி சென்றனர்.
உயிரிழப்பு
இந்நிலையில், காரில் தப்பி சென்றவர்களை வழிமறித்த ஹமாஸ் தீவிரவாதிகள் இருவரையும் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தனர். டேனிலாவின் தந்தை இயால் வால்ட்மேன் தொழில்ரீதியாக இந்தோனேசியாவில் முகாமிட்டிருந்தார். அவருக்கு மகளின் ஐபோனில் இருந்து அவருக்கு அபாய எச்சரிக்கை அழைப்பு வந்தது.
உடனடியாக விமானம் மூலம் இஸ்ரேலுக்கு திரும்பிய வால்ட்மேன், மகள் பயன்படுத்திய ஐபோனின் இருப்பிடத்தை கண்டறியும் வசதி மூலம் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றார். அங்கு மகள் டேனிலா, அவரதுகாதலர் டோமின் உடல்களை மட்டுமே அவரால் மீட்க முடிந்தது.