பிச்சை எடுப்பது குற்றம்.. அதற்கும் இந்த நாட்டில் லைசென்ஸ் பெற வேண்டும் - எங்கு தெரியுமா?
இந்த நாட்டில் பிச்சை எடுப்பவர்கள் லைசென்ஸ் எடுக்க வேண்டும் என்ற சட்டம் உள்ளது.
யாசகம்
குற்றம் கடந்த ஜூலை முதல் சிங்கப்பூரில் குறிப்பிட்ட ஒரு சாலையில் காலை 10 மணி முதல் 11 மணி வரையும் அல்லது மாலை 3 முதல் 4 மணி வரையும் லக்கி பிளாசா என்ற இடத்தின் அருகே சில பைகளை கையில் எடுத்துக்கொண்டு பெண் ஒருவர் தனக்கு உணவுக்கு காசு தருமாறும் அனைவரிடமும் கேட்டுள்ளார். இதனை கண்ட ஒருவர் போலீசில் புகாரளித்துள்ளார்.

இதனையடுத்து போலீசார் அவரை நோட்டமிட்டு பிடித்தனர். சிங்கப்பூர் சட்டப்படி யாசகம் பெறுவது குற்றமாகும், அதிலும் குறிப்பாக பொது வெளியில் மக்களுக்கு தொந்தரவு கொடுக்கும் வகையில் செயல்படும் நபர்களுக்கு, இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், 5000 சிங்கப்பூர் டாலர் வரை அபராதமும் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்டிரிக்ட் சட்டம்
இந்நிலையில், அந்த பெண்மணி வெளிநாட்டு ஊழியராக இருக்க வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படும், இந்த சூழலில் அவரிடம் தற்பொழுது தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர் வெளிநாட்டு ஊழியராக இருந்தால், குடிவரவு அதிகாரிகளிடம் அவர் ஒப்படைக்கப்படுவார்.

அல்லது அவர் சிங்கப்பூராராக இருந்து, உண்மையில் தனது வாழ்வாதாரத்திற்காக கஷ்டப்பட்டு வருகிறார் என்றால், அரசு அவருக்கு வேண்டிய உதவிகளை செய்யும். மேலும், இங்கு House To House and Street Act என்கின்ற சட்டத்தின் படி, வீடு வீடாக சென்று நிதியை வசூல் செய்யக்கூட தனியாக லைசென்ஸ் பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
அருங்காட்சியகத்திற்கு வழங்கப்படவுள்ள விடுதலைப் புலிகள் தலைவரின் நினைவுப் பரிசு! நீதிமன்றின் விசேட உத்தரவு IBC Tamil