அருவியில் தவறிய மகளை காப்பாற்ற போராடிய தந்தை - திடுக்கிடும் கடைசி நிமிடங்கள்!

Death Salem
By Sumathi May 02, 2023 04:17 AM GMT
Report

அருவியில் கால் தவறி கீழே விழுந்து பாறையில் அடிபட்டு தந்தை மற்றும் மகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோடை விடுமுறை

சென்னை மந்தவெளி பகுதியைச் சேர்ந்தவர் பாலமுரளி (43). ஐடி கம்பெனியில் பணிபுரிந்து வந்துள்ளார். மனைவி சந்திர லட்சுமி (41). மூத்த மகள் பெயர் சௌமியா (13) இளைய மகள் பெயர் சாய் ஸ்வேதா (3). கோடை விடுமுறை என்பதால் தனது மனைவி மகள்களுடன் ஏற்காட்டிற்கு வந்துள்ளார்.

அருவியில் தவறிய மகளை காப்பாற்ற போராடிய தந்தை - திடுக்கிடும் கடைசி நிமிடங்கள்! | Father Daughter Died Yercaud Nallur Water Falls

தொடர்ந்து, தங்கும் விடுதி ஒன்றில் தங்கி ஏற்காட்டில் உள்ள சுற்றுலா இடங்களை சுற்றி பார்த்துள்ளனர். இந்நிலையில், ஏற்காட்டில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நல்லூர் நீர்வீழ்ச்சிக்கு சென்றுள்ளனர்.

பலியான சோகம்

அங்கு, அருவியில் குளித்துவிட்டு பாலமுரளி தனது மகள் சௌமியாவை பாறை மீது ஏற்றி உள்ளார். மகள் கீழே விழுந்து விடக்கூடாது என்பதற்காக அவரது தந்தையும் பாறையின் மீது ஏறி மேலே செல்ல முற்பட்டுள்ளார். அப்போது தவறுதலாக அவர்களது கால் தவறி இருவரும் கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

அதனையடுத்து உடனே சம்பவ இடம் விரைந்த போலீஸார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.