மாடியிலிருந்து கால் தவறி விழுந்த தம்பியை மார்பில் தாங்கி காப்பாற்றிய அண்ணன் - வைரலாகும் வீடியோ
Viral Video
Kerala
By Nandhini
மாடியிலிருந்து கால் தவறி விழுந்த தம்பியை, கீழே நின்று கொண்டிருந்த அண்ணன் தன் மார்பில் தாங்கி, உயிரை காப்பாற்றிய வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தம்பியின் உயிரை காப்பாற்றிய அண்ணன்
கேரள மாநிலம், மலப்புறம் மாவட்டம், சங்கரம் குளம் என்ற இடத்தில் ஷபீக், சாதிக் இரு சகோதரர்கள் வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அப்போது, தம்பி ஷபீக் மாடியில் சுத்தம் செய்து கொண்டிருந்தபோது, கால் இடறி கீழே விழுந்தார்.
இதைப் பார்த்ததும், கீழே நின்றுக்கொண்டிருந்த அண்ணன் சாதிக் தன் மார்பில் தாங்கி தம்பியின் உயிரை காப்பாற்றினார்.
இது தொடர்பாக காட்சிகள் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியிருந்தது. தற்போது, இந்த சிசிடிவி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.