மருத்துவ செலவுக்கு பணமில்லை..பச்சிளம் குழந்தையை உயிருடன் புதைத்த தந்தை - பகீர் சம்பவம்!
கைக்குழந்தையை பெற்றோர்கள் உயிருடன் மண்ணில் புதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சி அளித்துள்ளது.
பச்சிளம் குழந்தை
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள நவுசாகர் பெரோஸ் பகுதியை சேர்ந்தவர் தாயாப். இவரது மனைவி கடந்த 15 நாட்கள் முன் பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். ஏழ்மையில் வாடும் இந்த குடும்பம் பெரும் துன்பத்தில் வாடி வந்திருக்கிறது.
இந்த சூழ்நிலையில், குழந்தையின் ஆரோக்கியம் குன்றியதால் சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் மிகுந்த ஏழ்மையில் வாழ்ந்து வந்த தாயாபிடம் மருத்துவ செலவுக்கு பணம் இல்லததால், பச்சிளம் குழந்தையை உயிருடன் மண்ணில் குழிதோண்டி புதைத்துள்ளார்.
பகீர் சம்பவம்
இதனால் குழந்தை மூச்சுத்திணறி உயிரிழந்தது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் தந்தை தாயாபை கைது செய்தனர். இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தியபோது, மருத்துவ செலவுக்கு பணம் இல்லத்ததால் குழந்தையை புதைத்தாக தாயாப் வாக்குமூலம் அளித்துள்ளார்.
மேலும் புதைக்கப்பட்ட குழந்தையின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இப்படி ஒரு அவலம் ஒரு பக்கம் இருக்க மற்றொரு பக்கம் கணவன் மனைவி இருவரும் சிறுமியை நிர்வவணப்படுத்தி துன்புறுத்தியுள்ளனர்.
அதாவது, பாகிஸ்தான் தலைநகர் லாகூர் மாகாணத்தில் நடந்த மற்றொரு சம்பவத்தில் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து தங்களின் வீட்டில் வேலை செய்து வந்த 13 வயது சிறுமியை தொடர்ச்சியாக பலமுறை நிர்வவணப்படுத்தி அடித்து துன்புறுத்திய சம்பவமும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.