பைபிள் வசனம் தெரியாததால் சிறுவன் கொலை: உயிருடன் புதைத்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை
அமெரிக்காவில் பைபிள் வசனங்கள், சரியாக தெரியாததால் சிறுவனை, உயிருடன் பனியில் புதைத்த வழக்கில் இளைஞருக்கு 20 வருடங்கள் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள விஸ்கான்சின் என்ற பகுதியில் வசிக்கும் 17 வயது இளைஞருக்கு இந்த வழக்கில் 20 வருடங்கள் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குற்றவியல் புகாரின்படி, ஈதன் ஹஸ்சுல்ட்ஸ் என்ற சிறுவன், 13 பைபிள் வசனங்களை சரியாக மனப்பாடம் செய்யத் தவறியதால் கொடூரமாக தண்டிக்கப்பட்டுள்ளார்.
அதாவது கடந்த 2018-ம் வருடத்தில், 14 வயதுடைய டாமியன் ஹஸ்சுல்ட்ஸ் என்ற சிறுவனிடம் அவரின் தந்தை, ஈதன் ஹஸ்சுல்ட்ஸை கடுமையாக தண்டிக்கும் படி வற்புறுத்தியுள்ளார்.
இதனால், டாமியன் ஹஸ்சுல்ட்ஸ், சிறுவனை கடுமையாக துன்புறுத்தியிருக்கிறார். மேலும் 80 பவுன் அளவுடைய பனியில் சிறுவனை உயிருடன் புதைத்து அரை மணி நேரத்திற்கு அங்கே விட்டுச் சென்றுள்ளனர்.
இதனால், மூச்சுத்திணறி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், அச்சிறுவனின் தலை, வயிறு மற்றும் மார்பு பகுதிகளில் பலமான காயங்கள் இருந்தது விசாரணையில் கண்டறியப்பட்டது. மேலும், சிறுவனின் தாயார் தான், தன் மகன் பனியில் புதைந்து கிடப்பதை பார்த்திருக்கிறார்.
தற்போது, 17 வயது இளைஞராக இருக்கும் டாமியன் ஹஸ்சுல்ட்சுக்கு 20 வருடங்கள் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. மேலும் பத்து வருடங்களுக்கு அவரை கண்காணிப்பில் வைத்திருக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.