கட்டிலில் உறங்கிய தந்தை, மகன் - உடல் நசுங்கி உயிரிழந்த கொடூரம்! நடந்தது என்ன?

Crime Death Dindigul
By Vidhya Senthil Nov 04, 2024 05:29 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in குற்றம்
Report

கட்டில் உடைந்து தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் 

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கோபி கிருஷ்ணன் வயது 35 தையல் தொழில் செய்து வருகிறார்.  இவரது மனைவி லோகேஸ்வரி வயது 30 இவரது மனைவி நத்தம் அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார்.

Father and son died due to broken bed

இவர்களுக்கு கார்த்திக் ரோஷன் வயது 9 எஸ்வந்த் 6 என இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். மூத்த மகன் கார்த்திக் ரோஷனும் தந்தை கோபி கிருஷ்ணனும் வழக்கம்போல் வீட்டின் மாடியில் உள்ள இரும்பு கட்டிலில் படுத்து உறங்குவது வழக்கம்.

அதேபோல் தாய் லோகேஸ்வரியும் இரண்டாவது மகன் யஸ்வந்த் கீழ் வீட்டில் படுத்து உறங்குவது வழக்கம்.நேற்று இரவு வழக்கம் போல் கோபி கிருஷ்ணன் மகன் கார்த்திக்கும் டிவி பார்த்துக் கொண்டு இரும்பு கட்டிலில் தூங்கி உள்ளனர்.

குளத்தில் மிதந்த சிறுமியின் உடல் - கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய கிராம மக்கள்

குளத்தில் மிதந்த சிறுமியின் உடல் - கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய கிராம மக்கள்

அப்போது மனைவி லோகேஸ்வரி மருத்துவமனைக்கு பணிக்கு செல்வதற்காக வெகு நேரமாகியும் மாடியில் இருந்து வராத தனது மகனையும் கணவரையும் தேடி மேலே சென்று உள்ளார்.அப்போது கணவன் மகன் இருவரும் இறந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மனைவி லோகேஸ்வரி சாணார்பட்டி காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

 உயிரிழந்த சம்பவம்

தகவலின் அடிப்படையில் அங்கு வந்த காவல்துறையினர் இருவரின் சடலத்தை கைப்பற்றி உடல் கூறு ஆய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .

கட்டிலில் உறங்கிய தந்தை, மகன் - உடல் நசுங்கி உயிரிழந்த கொடூரம்! நடந்தது என்ன? | Father And Son Died Due To Broken Bed

மேலும் காவல்துறையினரின் முதல் கட்ட விசாரணையில் இரும்பு கட்டில் கால்களில் உள்ள நான்கு போல்ட்டுகளும் இல்லாததால் இரும்பு கட்டில் கால் முறிந்து விழுந்ததில் இருவரின் கழுத்துப் பகுதி நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்ததாக கூறப்படுகிறது.

தந்தை மகன் இருவர் ஒரே நேரத்தில் கட்டில் கால் முறிந்து விழுந்து பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.