14 வயது சிறுமி கர்ப்பம் - தந்தையும் தாத்தாவும் சேர்ந்து செய்த கொடூரம்
14 வயது சிறுமியை தந்தை, தாத்தா மற்றும் மாமா சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
14 வயது சிறுமி
உத்தரப் பிரதேச மாநிலம் அவுராயா மாவட்டத்தில் உள்ள 14 வயது சிறுமி தனது அத்தையுடன் காவல் நிலையத்திற்கு சென்று பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் அளித்துள்ளார்.
12 ஆண்டுகளுக்கு முன், சிறுமியின் பெற்றோருக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.
தாய் மரணம்
அப்போது, சிறுமியின் தாய் அவரை அழைத்து டெல்லிக்கு இடம் பெயர்ந்து விட்டார். 4 வருடங்களுக்கு முன்னர் டெல்லி சென்ற சிறுமியின் தந்தை மற்றும் மாமா சிறுமியை தங்களுடன் அழைத்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஆண்டு சிறுமியின் தாய் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து சிறுமியின் தந்தை, தாத்தா, மாமா தன்னை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக சிறுமி தெரிவித்துள்ளார்.
சிறுமியின் தாத்தா அவரை வயல்வெளிக்குள் அழைத்து சென்று பாலியல் தொல்லை அளித்ததாகவும், மாமா அறைக்குள் நுழைந்து அத்துமீறி நடந்து கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
கர்ப்பம்
மேலும், தனது தந்தை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாகவும், எதிர்ப்பு தெரிவித்தால் கொன்று விடுவதாக மிரட்டையுள்ளதாகவும் தனது புகாரில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் கர்ப்பமடைந்துள்ளார். அதை அவளது அத்தைக்கு தெரிவித்த போது அவரிடமிருந்து எந்த உதவியும் கிடைக்கவில்லை.
இதனையடுத்து கடந்த டிசம்பர் 22 ஆம் தேதி தனது தந்தை, தாத்தா மற்றும் மாமா சேர்ந்து கொலை செய்ய முயற்சிப்பதாகவும், அதனால் அங்கிருந்து தப்பி அத்தை வீட்டிற்கு வந்ததாகவும் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.
உடனடியாக போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சிறுமியின் தாத்தா(70), தந்தை(45) மற்றும் மாமாவை(27) கைது செய்து சிறையில் அடைத்தனர்.