மனைவியுடன் அப்பாவுக்கு தகாத உறவு - மரணத்திற்கு முன் இளைஞர் வெளியிட்ட ஷாக் வீடியோ!
மரணத்திற்கு முன் இளைஞர் வெளியிட்ட வீடியோ ஒன்று அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
மகன் மரணம்
பஞ்சாபைச் சேர்ந்தவர் அகில் அக்தர்(33). இவர் தனது மரணத்துக்கு முன் அவர் பதிவு செய்த வீடியோவில், தனது தந்தைக்கும் மனைவிக்கும் இடையே தகாத உறவு இருந்ததாகவும்,
தனது தாய் மற்றும் சகோதரி தன்னை கொலை செய்ய அல்லது பொய் வழக்கில் சிக்க வைக்க சதி செய்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
அந்த வீடியோவில், "அவர்கள் என்னை பைத்தியம் என்று கூறி தங்கள் நற்பெயரை காப்பாற்றப் பார்க்கிறார்கள். நான் என் மனைவியை திருமணம் செய்யவில்லை; என் மனைவியை என் தந்தைதான் திருமணம் செய்தார்" என்று பேசியுள்ளார்.
ஷாக் வீடியோ
குடும்ப நண்பர்களுக்கு அனுப்பப்பட்ட இந்த வீடியோவின் அடிப்படையில், அவரது தந்தை மற்றும் தாய் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. மேலும், மற்றொரு வீடியோவில் இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் தனது மனநிலை கோளாறால் கூறப்பட்டவை என்றும்
அவர் தெரிவித்திருப்பது தற்போது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் போதைப்பொருள் அதிகமாக உட்கொண்டதால் அகில் இறந்ததாக குடும்பத்தினர் கூறியது குறிப்பிடத்தக்கது.