video game; மெய்மறந்து மூழ்கிய தந்தை..3 மணி நேரம் துடிதுடித்து இறந்த மகள் - பகீர் பின்னணி!
தந்தை வீடியோ கேம் அடைமையானதில் குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி எற்படுத்தியுள்ளது.
விளையாடிய தந்தை
இந்த நவீன உலகத்தில் பெற்றோர்கள் அவர்களது குழந்தைகளை பார்த்துகொள்வதில் கவனமின்மையான சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தாய் மற்றும் தந்தை ஸ்மார்ட் போன் உள்ளிட்ட சாதனங்களின் மீது கொண்ட ஈர்ப்பினால் குழந்தைகள் மீது செலுத்த வேண்டிய கவனத்தை சரியாக கொடுக்காமல் வளர்கின்றன.
அந்த வகையில், தந்தையின் வீடியோ கேம் அடிமைத்தனத்தால் 2 வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள நகர்ப்புற பகுதி ஒன்றில்,
வெளியில் சென்றிருந்த தாய் வீட்டுக்கு வந்து பார்த்த போது காரில் அவரது குழந்தை மூச்சுப் பேச்சின்றி கிடந்துள்ளது. பதறிபோன அவர் சி.பி.ஆர் உள்ளிட்ட முதலுதவிகளைச் செய்து பார்த்தும் பயன் அளிக்கவில்லை. உடனே அவரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர்.
பகீர் பின்னணி
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை எற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். அதன் பிறகு குழந்தையின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். அதன்படி, குழந்தை 42.7 டிகிரி செல்சியஸ் வெப்பம் தாக்கியதின் காரணமாக உயிரிழந்தது தெரியவந்தது.
இது குறித்து போலிசார் நடத்திய விசாரணையில், குழந்தையின் தந்தை, வீட்டின் முன் ஹோண்டா SUV காரை பார்க் செய்து அதில் குழந்தையை விட்டுவிட்டு வீட்டுக்குள் பிளே ஸ்டேஷனில் வீடியோ கேமில் மூழ்கியிருந்திருகிறார்,
என்றும் வாகனத்துக்குள் ஏசி ஓடாத நிலையில் சுமார் 3 மணி நேரமாக வெப்பத்தில் துடிதுடித்து குழந்தை உயிரிழந்துள்ளது என்ற உண்மை வெளிவந்தது. இதனைத் தொடர்ந்து கொலை மற்றும் குழந்தைகள் வன்கொடுமை பிரிவின் கீழ் தந்தை மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.