150 நிமிடங்களில் 1,200 கிலோமீட்டர் தூரம் - விமானத்தைவிட வேகமாக இயங்கும் ரயில் இதுதான்
சீனா அதிவேக ரயிலை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதிவேக ரயில்
சீனாவில் அறிமுகப்படுத்திய அதிவேக ரயிலானது மணிக்கு 600 கிலோ மீட்டருக்கும் அதிகமான வேகத்தில் பயணிக்கிறது. இந்த ரயில், மாக்லேவ் தொழில்நுட்பத்தில் இயங்குகிறது.
ரயில் ஓடும்போது, அதற்கு தண்டவாளத்துடன் எந்த தொடர்பும் இருக்காது. இந்த தொழில்நுட்பத்தால் உராய்வு ஏற்படாது. பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் இடையேயான தூரம் 1,200 கிலோ மீட்டர். தற்போது, இந்த இரண்டு நகரங்களுக்கும் இடையிலான பயணம் 5.30 மணி நேரம் ஆகிறது.
சீனா இலக்கு
இந்நிலையில் இந்த புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட Maglev அதிவேக ரயில் வெறும் 150 நிமிடங்களில் ( 2.5 மணி நேரத்தில்) இலக்கை அடையும். 2025ஆம் ஆண்டு இறுதிக்குள் இதை 50,000 கிலோமீட்டராக அதிகரிக்க சீனா இலக்கு வைத்துள்ளது.
ராயின் உள்ளே அதிநவீன வசதிகளைக் கொண்டுள்ளது. விசாலமான கேபின் மற்றும் பெரிய டிஜிட்டல் ஸ்கிரீன்கள் ஆகியவை அமைந்துள்ளது. இந்த அதிவேக மாக்லேவ் ரயிலை சீனா ரயில்வே ரோலிங் ஸ்டாக் கார்ப்பரேஷன்(CRRC) வடிவமைத்துள்ளது.
இந்த தொழில்நுட்பம் மணிக்கு 620 மைல்களுக்கு மேல் (சுமார் 1,000 கிமீ/மணி) வேகத்தை எட்டியது. இது ஒரு விமானத்தைவிட (மணிக்கு 547-575 மைல்கள்) வேகமானது என்பது குறிப்பிடத்தக்கது.