ரூ.2.4 கோடிக்கு ஆன்லைன் ஷாப்பிங் செய்த பாட்டி - கடன் கொடுக்க மனசில்லையாம்..
மூதாட்டி ரூ.2.4 கோடிக்கு ஆன்லைன் ஷாப்பிங் செய்து கவனம் ஈர்த்துள்ளார்.
ஆன்லைன் ஷாப்பிங்
சீனாவின் ஜியாடிங் பகுதியை சேர்ந்தவர் வாங்(66). தனியாக வசித்து வருகிறார். ஆன்லைனில் ஷாப்பிங் செய்து தனது பொழுதை கழிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார். வீட்டில் எங்கு பார்த்தாலும் ஆன்லைனில் வாங்கப்பட்ட பொட்டலங்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
மேலும், பிரிக்கப்படாத பொருட்களுக்களை வைப்பதற்காக மற்றொரு வீட்டையும் வாடகைக்கு எடுத்து, வாங்கிய பொருட்களை குவித்து வைத்திருக்கிறார். இதுகுறித்து வாங் கூறுகையில், ‘தனது நண்பர்களும் குடும்பத்தினரும் தன்னிடம் பணம் கேட்டு பிச்சை எடுப்பதைத் தடுக்கவே பணத்தை வீணாக்க விரும்புகிறேன்.
மூதாட்டியின் செயல்
நான் பணக்காரர் என்ற தோற்றம் வரக்கூடாது என்பதற்காக, எல்லா பணத்தையும் சாமான்கள் வாங்குவதில் செலவழித்துவிட்டேன். என் வீட்டில் பொருட்களைக் குவியல்களாகக் காணும்போது என்னிடம் கடன் கேட்பது பொருத்தமற்றது என்று நினைத்து அவர்கள் என்னிடம் கடன் கேட்க மாட்டார்கள்.
முக்கியமாக தங்க நகைகள், சுகாதாரத் துணை உபகரணங்கள் மற்றும் அழகு பொருட்கள் ஆகியவற்றை அதிகளவு வாங்கியுள்ளார். இவரது இந்த நடவடிக்கை மற்றவர்கள் தன்னிடமிருந்து கடன் வாங்குவதைத் தடுக்க, ஷாப்பிங்கில் பணத்தை செலவிட முடிவு செய்தேன்’ எனத் தெரிவித்துள்ளார்.
இவர் பொட்டலங்கள் அடைந்து வைத்திருப்பதால் தங்கள் வீடுகளில் பூச்சித் தொல்லைகள் அதிகரித்து இருப்பதாகவும், சில பொருட்களில் இருந்து கெட்ட வாசனை வீசுவதாகவும் அண்டை வீட்டார் புகார்கள் தெரிவித்து வருகிறார்கள். இருந்தபோதிலும் பாட்டி பொருட்களை வாங்கிக் குவிப்பதை நிறுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.