படுக்கை அறைக்கு அழைத்து... பிரபல பாடகர் மீது ஆடை வடிவமைப்பாளர் பாலியல் புகார்!

Sexual harassment Bollywood
By Sumathi 3 மாதங்கள் முன்

பிரபல பாடகர் ராகுல் ஜெயின் மீது, ஆடை வடிவமைப்பாளரான இளம்பெண் பாலியல் புகார் அளித்துள்ளார்.

 ராகுல் ஜெயின்

பாலிவுட்டில் பிரபல பின்னணி பாடகராக இருப்பவர் ராகுல் ஜெயின். மேலும் பல வெப் சீரிஸ்களுக்கும் இசையமைத்துள்ளார். இந்நிலையில், ஆடை வடிவமைப்பாளரான 30 வயது இளம்பெண் இவர் மீது ஓசிவரா பாலியல் புகாரை அளித்துள்ளார்.

படுக்கை அறைக்கு அழைத்து... பிரபல பாடகர் மீது ஆடை வடிவமைப்பாளர் பாலியல் புகார்! | Fashion Designer Complaint Sex Case Against Singer

அவரது புகாரில், ''என்னை ராகுல் ஜெயின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்பு கொண்டு அவரது தனிப்பட்ட ஆடை வடிவமைப்பாளராக வைத்துக் கொள்வதாகவும், இதற்காக அந்தேரி புறநகர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள தனது வீட்டில் வந்து சந்திக்கும்படியும் அழைத்தார்.

பாலியல் புகார்

அவரது வீட்டுக்கு சென்றேன். அங்கு தனது உடைகளை காட்டுவதாக கூறி படுக்கை அறைக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்து விட்டார்" என்று கூறியுள்ளார். ராகுல் ஜெயின் மீது போலீசார் கற்பழிப்பு வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

படுக்கை அறைக்கு அழைத்து... பிரபல பாடகர் மீது ஆடை வடிவமைப்பாளர் பாலியல் புகார்! | Fashion Designer Complaint Sex Case Against Singer

இது குறித்து ராகுல் ஜெயின் பேசுகையில், ''என் மீது பாலியல் புகார் அளித்துள்ள பெண்ணை நான் பார்த்தது இல்லை. என்மீது அவர் சுமத்திய குற்றச்சாட்டுகள் பொய்யானவை. ஆதாரமற்றவை" என்று கூறியுள்ளார். இச்சம்பவம் பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.