மின்னல் வேகத்தில் வந்த முதலமைச்சர் கார் - குறுக்கே பாய்ந்த விவசாயிகள்
Andhra Pradesh
YS Jagan Mohan Reddy
By Thahir
ஆந்திராவில் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி சென்ற காரை வழிமறித்து விவசாயிகள் போராட்டம் நடத்த முயன்றதால் பரபரப்பு நிலவியது.
முதலமைச்சரின் காரை மறித்த விவசாயிகள்
ஆந்திராவில் ஏழைகளுக்கு வீடுகள் கட்டுவதற்காக தும்பற்றி, மோட்டுமாறு பகுதிகளில் 210 ஏக்கர் நிலத்தை ஆந்திர அரசின் அதிகாரிகள் கையகப்படுத்திய நிலையில் அதற்கான இழப்பீடு இதுவரை வழங்கவில்லை என்று விவசாயிகள் குற்றம்சாட்டி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் வாகனத்தை அனந்தபூர் மாவட்டத்தில் தடுத்து நிறுத்த முயன்று விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
அப்போது முதலமைச்சருடன் வந்த பாதுகாவலர்கள் மற்றும் போலீசார் அவர்களை அப்புறப்படுத்தி முதலமைச்சரை பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.