சாலையில் நடந்து சென்ற முஸ்லீம் பெண்ணை துன்புறுத்திய 6 பேர் கொண்ட கும்பல்..!

Viral Video Maharashtra
By Thahir Apr 27, 2023 10:22 AM GMT
Report

மகாராஷ்டிராவின் பேகம்புரா பகுதியில் இந்து மதத்தை சார்ந்த ஆண் நண்பருடன் பேசியதற்காக சாலையில் நடந்துச் ஹிஜாப் மற்றும் புர்கா அணிந்து சென்ற முஸ்லிம் இளம் பெண்ணிடம் 6 பேர் அடங்கிய கும்பல்  அத்துமீறலில் ஈடுபட்டு துன்புறுத்திய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

முஸ்லிம் பெண்ணை துன்புறுத்திய இந்து கும்பல்  

மகராஷ்டிரா மாநிலம் அகமத் நகர் அருகே உள்ள பகுதியைச் சேர்ந்தவர் முஸ்லிம் இளம் பெண் ஒருவர் இவர் கல்லுாரியில் பயின்று வருகிறார்.

இந்த நிலையில் அவுரங்காபாத்தில் உள்ள பீபி கா மக்பராவை பார்வையிட சிறுமி வந்துள்ளார் அப்போது அங்கு ஒரு இந்து ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

இதை பார்த்த  6 பேர் கொண்ட கும்பல் ஒன்று ஹிஜாப் அணிந்து நடந்து சென்ற அந்த முஸ்லிம் இளம் பெண்ணை ஏன் அந்த பையனுடன் உடன் இருந்தாய் எனக் கூறி துன்புறுத்த தொடங்கியுள்ளது.

A gang of 6 men harassed a Muslim woman

அந்த இளம் பெண் அணிந்திருந்த புர்கா மற்றும் ஹிஜாப்பை பிடித்து இழுத்த அந்த கும்பல் அவரிடம் இருந்த மொபைல் போனையும் பிடுங்கி துன்புறுத்தியது.

தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்த காவல்துறை 

அப்போது அந்த பெண் கதறும் காட்சிகள் பார்ப்போர் நெஞ்சில பரிதாபங்களை ஏற்படுத்துகிறது. முஸ்லிம் இளம் பெண் அப்போது அவர்களிடம் இருந்து செல்போனை திரும்பி பெற முயற்சிக்கும் போது அவரை அந்த கும்பல் தாக்க முயல்கிறது.

அப்போது அந்த இளம் பெண் கூச்சலிடுகிறார். ஆனால் அவ்வழியாக சாலையில் நடந்து சென்றவர்கள் யாரும் உதவிக்கு வரவில்லை.

இச்சம்பவம் பற்றி அறிந்த போலீசார் இளம் பெண்ணை அடையாளம் கண்டு புகார் கொடுக்கும் படி கேட்டுக் கொண்ட நிலையில் அந்த பெண் மற்றும் குடும்பத்தினர் புகார் கொடுக்க மறுப்பு தெரிவித்துவிட்டனர்.

இதையடுத்து தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் முதல்கட்டமாக 3 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.