விவசாயிகளின் கருப்பு தினம்; உருவபொம்மையை எரித்து தீவிர போராட்டம் - தலைநகரில் பதற்றம்!
விவசாயிகள் உருவபொம்மையை எரித்து தீவிர போரட்டத்தில் ஈடுப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விவசாயிகள் போராட்டம்:
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லைகளை முற்றுகையிட்டு விவசாயிகள் தொடர் போராட்டம் மேற்கொண்டனர். விவசாய விலை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை,கடன் தள்ளுபடி உள்ளிட்ட 13 கோரிக்கையை வலியுறுத்தி, விவசாயிகள் டெல்லி சலோ போராட்டத்தை அறிவித்தனர்.
தொடர்ந்து, பஞ்சாப்-ஹரியானா எல்லையில் சக்தி வாய்ந்த டிராக்டர்கள் தடுப்புகள் என விவசாயிகள் போரட்டம் தீவிரம் அடைந்தது. இதனால் விவசாயிகளை டெல்லிக்குள் நுழையாதவாரு காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
கருப்பு தினம்:
இந்நிலையில், போராட்டம் சூடுப்பிடித்ததை அடுத்து போலீசார் மற்றும் விவசாயிகளிடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் பதிண்டா மாவட்டத்தை சேர்ந்த இளம் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இந்த போராட்டங்கள் வாக்குகளை பாதிக்கும் என்பதை உணர்ந்த மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு இறங்கி வந்திருக்கிறது.
இதுவரை 4 சுற்று பேச்சுவார்த்தை முடிவடைந்துள்ள நிலையில், 5 ஆம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கவுள்ளது. ஆனால், தொடர் பேச்சுவார்த்தை வைத்து மட்டுமே அரசு காலத்தை வீணடிப்பதாக விவசாய சங்கங்கள் குற்றம்சாட்டியுள்ளன.
இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் கருப்பு தினத்தை அனுசரித்துள்ளனர்.
மேலும், பாஜக தலைவரின் உருவபொம்மை, படங்களை தீயிட்டு எரித்து தீவிர போட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.